2025 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடக்குமா, நடக்காதா? பிரதமரின் தெளிவான பதில்!

 2025 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைசி நடக்குமா, நடக்காதா? பிரதமரின் தெளிவான பதில்! 


பிரதமர் கல்விமான்களிடம் கேள்வி

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தரம் ஐந்தில் புலமைப் பரிசில் பரீட்சை ஒன்றை ஏற்படுத்த காரணமாக இருந்த காரணிகள் யாவை என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய கல்விமான்களிடம் கேள்வி எழுப்பினார்......
அலரிமாளிகையில் நேற்று இடம் பெற்ற கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கல்விமான்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.....

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை நீக்குமாறு பொது மக்கள் உட்பட பல தரப்புக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.....

ஆனால் இவ்விடயத்தில் நாம் அவசரப்பட்டு மேற்கொள்கின்ற தீர்மானங்கள் வேறு பரிமாணங்களில் கல்வித் துறைக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக மாறிவிடக்கூடாது கல்வித்துறையில் நிலவி வருகின்ற பாரிய மனிவள, பௌதீக வளக்குறை பாடுகளே தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை உருவாக்கப்பட காரணமாக அமைந்துள்ளன..... 

எனவே அக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை நீக்குவதற்கு நாம் அவசரப்பட்டு விடக்கூடாது. எனவும் பிரதமர் இங்கு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.....


கருத்துரையிடுக

0 கருத்துகள்