ஆசிரியர்கள் பாடசாலை முதல் நாளில் விடுமுறை பெற்றுக் கொள்வது தொடர்பான நடைமுறை!

 வருடத்தின் முதலாவது வேலை நாளில் லீவு எடுத்தால் ......?


லீவு எடுப்பதை வலுப்படுத்தும் பதிவு அல்ல இது .சரியாக எடுப்பவரும் ,அனுமதிப்பவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் இது.18/2022 ஆம் அரசாங்க நிருவாக சுற்றறிக்கையில் 1:11 உப பிரிவில் உள்ளதை கவனத்தில் எடுங்கள்.2025 வருடத்தின் முதலாவது வேலை நாளில் லீவு எடுத்தால் அதை 2025 வருட லீவில் கழிக்க முடியாது.2024 ஆண்டு லீவில்தான் கணிக்க வேண்டும்
Circular 18



அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை : 18/2022 எண்: EST-6/03/LEA/4000 பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுதந்திர சதுக்கம் கொழும்பு 07. 2022.09.09 அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் தாபனவிதிக் கோவையின் 1 ஆம் தொகுதியின் XII ஆம் அத்தியாயத்தின் பிரிவுகளில் திருத்தங்கள் செய்தல் தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 1, 6, 8, 10 மற்றும் 21 ஆம் பிரிவுகள் தொடர்பில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் 02. அந்த அத்தியாயத்தின் 1 ஆம் பிரிவுக்கு 1:11 ஆகப் புதிய உப பிரிவொன்றைச் சேர்ப்பதற்கும், அந்த அத்தியாயத்தின் 6:1:2, 8:2, 8:2:1, 10:1:4, 10:1:6 மற்றும் 21:1 ஆம் பிரிவுகளில் பின்வருமாறு திருத்தங்களைச் செய்வதற்கும் 2022.04.16 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1:11 ஏதேனும் ஒரு பஞ்சாங்க வருடத்தின் முதலாவது வேலை நாளில் சேவைக்குச் சமுகமளிக்காத உத்தியோகத்தர் ஒருவருக்கு லீவுகளுக்கு அனுமதி வழங்கும் போது முதல் நாளை புதிய பஞ்சாங்க வருடத்தின் அமய லீவு அல்லது ஓய்வு லீவுகளால் ஈடு செய்யப்படும் விதத்தில் அனுமதியளிக்க முடியாது. அத்தகைய உத்தியோகத்தரொருவருக்கு முன்னைய வருடத்தின் மீதமுள்ள ஓய்வு லீவுகளிலிருந்து அல்லது தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 10 ஆம் பிரிவின் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படுமாயின் முன்னைய வீவுகளிலிருந்த மாத்திரமே அனுமதி அளிக்க முடியும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்