Rs. 6000 Allowance School Students Cabinet Approval Given

Rs. 6000 Allowance  School Students  

7. பாடசாலை மாணவர்களுக்கு காகிதாதிகள் வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஆறுதல் (அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கிடைக்காத ஏனைய தகைமையுடைய குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு கொடுப்பளவு வழங்கல்
அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு காகிதாதிகளை வாங்குவதற்காக 6,000/- ரூபா கொடுப்பனவு தற்போது அக்குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக் கொள்ளாத குடும்பங்களில் பெற்றோர்களை இழந்த மாணவர்கள், தாய் அல்லது தந்தை
இயலாமைக்குட்பட்டுள்ள குடும்பங்களிலுள்ள மாணவர்கள், சிறுவர் இல்லங்களிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும், விசேட காரணங்களால் ஆதரவற்ற நிலைமைக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கான பொறுப்பு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பங்களிலுள்ள மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு இற்றைப்படுத்தப்பட்ட தரவுத்தொகுதியொன்று இன்மையால், மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள காகிதாதிகள் 2025 புதிய பாடசாலைத் தவணை ஆரம்பிக்கும் போது வழங்க வேண்டிய தேவைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, நாடளாவிய ரீதியிலுள்ள 10,096 பாடசாலைகளில் மொத்தமாக 300 மாணவர்களை விடவும் குறைந்த மாணவர்கள் கல்வி பயில்கின்ற 6,576 பாடசாலைகளிலுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து பாடசாலைக்குச் செல்கின்ற அனைத்து மாணவர்களுக்கும், மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற பௌத்த துறவற மாணவர்கள் மற்றும் ஏனைய மாயவர்களுக்கும் 6,000/- ரூபா வீதம் காகிதாதிகள் கொடுப்பனவை வழங்குவதற்கும், குறித்த கொடுப்பனவை வவுச்சர் ஒன்றின் மூலம் வழங்குவதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Cabinet Approval Given to provide 6000 for all students in schools less than 300 Students.

கருத்துரையிடுக

0 கருத்துகள்