பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் - ந.சந்திரகுமார் SLPS
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த.சா/த பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பின்வரும் விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பரீட்சை நிலையத்திற்கு செல்லும் போது, பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை,பேனா, பென்சில் மற்றும் அழிறப்பர்,கணித உபகரணங்கள் போன்றவற்றை மாத்திரம் தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
எந்தவொரு தொழில்நுட்ப சாதனங்களையும் உடலில் மறைத்து எடுத்துச் செல்லக் கூடாது.
1).பரீட்சை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன், பரீட்சை மண்டபத்திற்குச் சென்று உரிய சுட்டிலக்கம் கொண்ட மேசை கொண்ட கதிரையில் அமர வேண்டும்.உதாரணமாக....
*மு.ப.8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும் எனில், மு.ப.8.00 மணிக்கு பரீட்சை மண்டபத்திற்குச் செல்ல வேண்டும்.
*பி.ப.1.00 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும் எனில் பி.ப 12.30 மணிக்கு பரீட்சை மண்டபத்திற்குச் செல்ல வேண்டும்.
2).பரீட்சை மண்டபத்தில் உரிய ஆசனத்தில் அமர்ந்த பின் மு.ப 8.00/பி.ப 12.30 மணிக்கு பரீட்சை மேற்பார்வைக் குழுவினரால் உடற் பரிசோதனை செய்யப்படும்.
3). அதேபோல் மு.ப 8.15/பி.ப.12.45 மணிக்கு பரீட்சை அனுமதி அட்டை பரிசோதிக்கப்பட்டு, பரீட்சை அனுமதி அட்டையில் கையொப்பம் பெறப்படும்.
4). பரீட்சார்த்திகளுக்கு மு.ப.8.28/பி.ப.12.58 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும்.
5) பரீட்சை மு.ப.8.30/ பி.ப.1.00 பரீட்சை ஆரம்பமாகும்.
பரீட்சை ஆரம்பித்து, 30 நிமிடங்கள் தாமதமாக வருகை தரும் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்.எனினும் தாமதித்து வருகை தந்த நேரத்திற்கு,மேலதிக நேரம் வழங்கப்பட மாட்டாது.
அதேவேளை 30 நிமிடங்கள் மேல் தாமதித்து வருகை தரும் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது.திருப்பி அனுப்பப்படுவர்.
0 கருத்துகள்